தங்கையின் பயணத்தை ரத்து செய்வதற்காக சென்னையில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர்.
காலை 7.35 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து 174 பயணிகளுடன் இண்டிகோ விமானம் துபாய்க்கு புறப்பட தயாராக இருந்தது.
அந்த விமானத்தில் ஒரு நபர் வெடிகுண்டுடன் பயணிப்பதாக கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு ஆண் தகவல் கொடுத்துள்ளார்.
உடனடியாக பயணிகளையும், விமானத்திலும் சோதனை செய்ததில் வெடிகுண்டு இல்லை என்பது தெரியவந்தது.
கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த மணலியைச் சேர்ந்த ரஞ்சித் குமார் என்பவரை செல்போன் எண்ணை வைத்து போலீசார் பிடித்தனர்.
விசாரணையில், அவரது தங்கை கணவருடன் துபாய் செல்ல இருப்பதாகவும் குடும்ப பிரச்சனை காரணமாக தங்கையின் பயணத்தை தடுக்க வதந்தி பரப்பியதும் தெரியவந்தது.