காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத், காங்கிரசின் வீழ்ச்சிக்கு ராகுல் காந்தியின் குழந்தைத்தனமான போக்கு காரணம் என குற்றம்சாட்டியுள்ளார்.
2013ம் ஆண்டு காங்கிரசின் துணைத் தலைவராக ராகுல் நியமிக்கப்பட்டதில் இருந்து காங்கிரசில் கலந்தாலோசனை என்ற முறையை அவர் ஒழித்துவிட்டார் என்று சாடியுள்ளார்.
அனுபவம் வாய்ந்த அனைத்து மூத்தத் தலைவர்களும் ஓரங்கட்டப்பட்டனர் என்றும் அனுபவமில்லாத துதிபாடுபவர்களின் கூட்டம் ஒன்று கட்சியை வழிநடத்துகிறது என்றும் சோனியாகாந்திக்கு எழுதியுள்ள கடித்ததில் அவர் குறிப்பிட்டுள்ளார்.