இந்திய-வங்கதேச சர்வதேச கடல் எல்லையில் படகு கவிழ்ந்து நடுக்கடலில் தத்தளித்து கொண்டிருந்த 32 வங்கதேச மீனவர்களை இந்திய கடலோர காவல்படையினர் பத்திரமாக மீட்டனர்.
ஆகஸ்ட் 19 மற்றும் 20-ந்தேதிகளில் மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம் ஒட்டிய கடற்பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட ராட்சத அலையில் சிக்கி படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தொடர்ந்து, கடலில் அலையின் வேகம் அதிகமாக இருந்ததால் கரைசேர முடியாமல் படகின் நுனியை பிடித்துக் கொண்டு மீனவர்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த கடலோர காவல் படையினர், அவர்களை பத்திரமாக மீட்டு நல்லெண்ண அடிப்படையில் வங்கதேச கடலோரக் காவல் படையிடம் ஒப்படைத்தனர்.