கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளாக நிறுத்திவைக்கப்பட்ட மாணவர் விசாக்களை நாளைமுதல் வழங்க சீனஅரசு முடிவு செய்துள்ளது.
மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளைப் படித்துவந்த 23 ஆயிரம் இந்திய மாணவர்கள் கொரோனா காலத்தில் தாயகம் திரும்பினர்.
சீனப் பல்கலைக் கழகங்களில் பயின்று பாதியில் திரும்பிய மாணவர்கள், புதிய மாணவர்கள் மட்டுமின்றி, இந்திய தொழிலதிபர்களுக்கும், சீனாவில் பணிபுரிவோரின் குடும்பத்தினருக்கும் விசா வழங்கப்படும் என்று டெல்லியில் உள்ள சீன தூதரகம் அறிவித்துள்ளது.
சீனாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் மீண்டும் சேர ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழைய இந்திய மாணவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
விமான சேவையை மீண்டும் தொடங்க இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக இந்திய-சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.