இந்தியாவில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த முக்கிய நபரை கொலை செய்ய திட்டமிட்டிருந்த ஐ.எஸ். பயங்கரவாதியை கைது செய்துள்ளதாக ரஷ்யாவின் பாதுகாப்பு சேவை அமைப்பான எஃப்.எஸ்.பி.
அறிவித்துள்ளது. இது குறித்து தெரிவித்த அந்த அமைப்பு, இந்தியாவில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தி நாசவேலையில் ஈடுபட அந்த பயங்கரவாதி திட்டமிட்டு வந்ததாக குறிப்பிட்டுள்ளது.
ரஷ்யாவில் கைதான அந்த நபர், மத்திய ஆசிய பகுதியைச் சேர்ந்தவர் என்றும் துருக்கியில் ஐ.எஸ். இயக்கத் தலைவர்களில் ஒருவரால் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த தேர்வு செய்யப்பட்டவர் என்றும் எஃப்.எஸ்.பி.யின் விசாரணையில் தெரியவந்துள்ளது.