பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் உரைகளை நேரடியாக ஒளிபரப்பு செய்ய அந்நாட்டு ஊடக அமைப்பு தடை விதித்துள்ளது.
இஸ்லாமாபாத்தில் உரையாற்றும் போது காவல்துறை அதிகாரி மற்றும் பெண் நீதிபதியை இம்ரான்கான் மிரட்டியதால், அவரது நேரடி உரைகளை ஒளிபரப்ப பாகிஸ்தானின் ஊடக ஒழுங்குமுறை ஆணையம் தடை விதித்துள்ளது.
இம்ரான்கானின் பதிவு செய்யப்பட்ட உரை, கண்காணிப்புக்கு பிறகு மட்டுமே ஒளிபரப்ப அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.