ரஷ்யாவில் இருந்து ஒரே மாதத்தில் 74 லட்சம் டன் நிலக்கரியை சீனா இறக்குமதி செய்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளின் 70 சதவீத நிலக்கரித் தேவையை ரஷ்யாதான் பூர்த்தி செய்து வந்தது.
போலந்து, ஜெர்மனி ஆகிய நாடுகள் ரஷ்யாவின் நிலக்கரியை பெருமளவில் பயன்படுத்தி வந்த நிலையில், உக்ரைனுடனான போர் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் ரஷ்யப் பொருட்களுக்கு ஐரோப்பாவில் தடை விதிக்கப்பட்டது.
கடந்த ஐந்தாண்டுகளில் மிக அதிக அளவாக 74 லட்சத்து 20 ஆயிரம் டன் நிலக்கரியை ஒரே மாதத்தில் ரஷ்யாவிடம் இருந்து சீனா இறக்குமதி செய்துள்ளது.