புதிதாக பொறுப்பேற்ற ஆர்.ஜே.டி. கட்சி அமைச்சர்கள், துறை சார்பில் தங்களுக்கென புதிய வாகனங்கள் வாங்கக் கூடாது என்றும் தொண்டர்களை காலில் விழ வைக்கக்கூடாது என்றும் பீகார் துணை முதலமைச்சரும், அக்கட்சி தலைவருமான தேஜஸ்வி யாதவ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது குறித்த அறிவிப்பில், மற்றவர்களை சந்திக்கும் போது பாரம்பரியப்படி வணக்கம் தெரிவிக்க வேண்டும் என்றும் பூங்கொத்துகளை பரிசாக வழங்குவதற்கு பதில், புத்தகங்கள், பேனாக்களை வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.