புகாட்டி நிறுவனம் 16 சிலிண்டர் எஞ்சினும் 1600 குதிரைத் திறனும் கொண்ட மிஸ்ட்ரால் காரை அமெரிக்காவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது உலகின் அதிவேகமுள்ள காராக இருக்கும் என நம்பப்படுகிறது.
40 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்தக் கார் காற்றுத் தடை ஏற்படாத வகையில் தாழ்தளத்துடன் மேற்பகுதி திறந்தும் உள்ளது. இவ்வகையில் 99 கார்களை மட்டுமே தயாரிக்க உள்ள நிலையில் அறிமுகத்துக்கு முன்பே அனைத்துக் கார்களும் விற்றுவிட்டன. மிஸ்ட்ரால் கார் பெட்ரோலில் இயங்கும் வகையில் கடைசியானதாக அமைகிறது.
இனிவரும் மாடல்கள் பல்வகை எரிபொருளில் இயங்கும் ஹைபிரிட் காராக அமையும். 2019ஆம் ஆண்டு புகாட்டி சிரோன் சூப்பர் ஸ்போர்ட் கார் மணிக்கு 305 மைல் வேகத்தை எட்டியதாகக் கூறப்படும் நிலையில், புகாட்டி மிஸ்ட்ரால் கார் அதைவிட அதிவேகம் கொண்டதாக இருக்கும் என நம்பப்படுகிறது.