எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானம் 37 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது, விமானிகள் இருவரும் தூங்கியதால், திட்டமிட்டபடி விமானத்தை தரையிறக்க முடியாமல் போனது.
சூடானில் இருந்து எத்யோப்பியா தலைநகர் அடிஸ் அபாபாக்கு சென்று கொண்டிருந்த போயிங் 737 ரக விமானத்தின் விமானிகள் இருவரும் ஆட்டோ பைலைட் என்ற தானியங்கி முறையில் விமானம் பறப்பதற்கு செட் செய்து விட்டு உறங்கியுள்ளனர்.
இதனால் அடிஸ் அபாபா விமான நிலைய ஓடுபாதையில் தரையிறங்காமல் விமானம் கடந்து சென்றுள்ளது. விமானப் போக்குவரத்து கட்டுப்பாடு அறை அதிகாரிகள், விமானிகளை பல முறை தொடர்பு தொடர்பு கொள்ள முயன்ற போதும், விமானிகள் பதிலளிக்காமல் இருந்துள்ளனர்.
ஆட்டோ பைலட் இணைப்பு துண்டிக்கப்பட்டு அலாரம் ஒலித்த பிறகே விமானிகள் கண்விழித்து 25 நிமிடங்கள் தாமதமாக விமானத்தை தரையிறக்கி உள்ளனர்.