அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இரண்டு சிறிய விமானங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
இரட்டை இன்ஜின் கொண்ட செஸ்னா 340 விமானத்தில் 2 பேரும், ஒற்றை இன்ஜின் கொண்ட செஸ்னா 152 விமானத்தில் ஒருவரும் இருந்துள்ளனர்.
இரு விமானங்களும் வாட்சன்வில்லி நகரில் ஒரே நேரத்தில் தரையிறங்க முயன்ற போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விமானங்கள் விபத்துக்குள்ளானது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.