இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபயா ராஜபக்சே அமெரிக்காவில் நிரந்தரமாகக் குடியேற கிரீன் கார்டுக்கு விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையை கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாக்கி கடும் எதிர்ப்புகளால் பதவியை விட்டு விலகி கடந்த மாதம் அவர் வெளிநாடுகளுக்குத் தப்பியோடினார்.இந்நிலையில் அவர் அமெரிக்கக் குடியுரிமை கோரி காத்திருப்பதாக கூறப்படுகிறது.
அவர் மனைவி ஏற்கனவே அமெரிக்க குடியுரிமைப் பெற்றிருப்பதால் அதற்கான தகுதி இருப்பதாகவும் சட்டப்பூர்வமான பணிகளில் அவர் வழக்கறிஞர்கள் ஈடுபட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.