உக்ரைனில் ஷெல் தாக்குதலுக்கு உள்ளான ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தை மூடலாம் என ரஷ்யா தெரிவித்துள்ளது.
ரஷ்யா நடத்திய தொடர் தாக்குதலால் உக்ரைனின் ஸாபோரிஸ்சியா அணுமின் நிலையம் சேதமடைந்துள்ளது. அணுமின் நிலையம் இராணுவமயமாக்கப்பட்டு பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய ஐ.நா சபைக்கு அழைப்பு விடுத்துள்ளதற்கு ரஷ்யா ஆட்சேபம் தெரிவித்துள்ளதுடன், அணுமின் நிலையத்தை மூடலாம் என தெரிவித்தது.
ஆலையை மூடுவது அணுசக்தி பேரழிவின் அபாயத்தை அதிகரிக்கும் என உக்ரைனின் அணுசக்தி நிறுவனமான Energoatom பதில் தெரிவித்துள்ளது.