ரஷ்யாவில், 10 குழந்தைகளை பெற்றெடுக்கும் தாய்மார்களுக்கு 13 லட்ச ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என அதிபர் புடின் அறிவித்துள்ளார்.
இந்தியாவை விட 5 மடங்கு பெரிய நாடான ரஷ்யாவின் மக்கள் தொகை வெறும் 14 கோடியே 60 லட்சமாக உள்ளது.
கொரோனா மரணங்கள், உக்ரைன் போரில் ஏற்பட்ட உயிரிழப்புகள் போன்ற காரணங்களால் மக்கள் தொகை மேலும் குறைந்துள்ளதால் அதனை அதிகரிக்கும் நடவடிக்கையாக ரஷ்ய அரசு இந்த 13 லட்ச ரூபாய் பரிசுத்திட்டத்தை அறிவித்துள்ளது.
10-வதாக பிறக்கும் குழைந்தைக்கு 1 வயது நிறைவடையும் போது இந்தப்பரிசுத்தொகை வழங்கப்படும் என்றும் 10 குழந்தைகளும் உயிரோடிருக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.