நாட்டின் முதல் டபுள் டெக்கர் எலக்ட்ரிக் ஏசி பேருந்தின் இயக்கத்தை, மத்திய அமைச்சர் நிதின் கட்காரி மும்பையில் தொடக்கி வைத்தார்.
அசோக் லேலாண்ட் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஸ்விட்ச் மொபிலிட்டி, இந்த மின்சாரப் பேருந்தை தயாரித்துள்ளது.
231 கிலோ வாட் திறன் கொண்ட பேட்டரி இருப்பதால், ஒரு முறை சார்ஜ் செய்தால் 250 கிலோமீட்டர் வரை இந்த பேருந்து இயங்கும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
மும்பை மாநகரத்திற்காக இதே போன்று 200 டபுள் டெக்கர் மின்சார பேருந்துகளை தயாரித்து வழங்குவதற்கான ஆர்டரை ஸ்விட் மொபிலிட்டி நிறுவனம் பெற்றுள்ளது.
இதில் முதல் 50 பேருந்துகள் நடப்பு ஆண்டிலும், எஞ்சியவை அடுத்த ஆண்டிலும் டெலிவரி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.