5ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டுக் கடிதங்களை அனுப்பியுள்ள மத்திய அரசு, 5ஜி சேவையைத் தொடங்கத் தயாராகும்படி தொலைத்தொடர்பு நிறுவனங்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
5ஜி அலைக்கற்றை ஏலத்தில் பங்கேற்ற ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா, அதானி ஆகிய நிறுவனங்கள் அதற்கான கட்டணமாக மொத்தம் 17 ஆயிரத்து 876 கோடி ரூபாயை அரசுக்குச் செலுத்தியுள்ளன.
இந்நிலையில் அலைக்கற்றை ஒதுக்கீட்டுக் கடிதத்தை நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ளதாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.