வெளிநாட்டினருக்கான உலகின் சிறந்த வளர்ந்து வரும் 6 நகரங்களில் பெங்களூரு இடம்பெற்றுள்ளது.
ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, வேகமாக வளர்ந்துவரும் தொழில்நுட்ப மையங்களில் ஒன்றாக ஆயிரக்கணக்கான ஸ்டார்ட்-அப் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் தாயகமாக பெங்களூரு மாறியிருப்பது வெளிநாட்டினரை ஈர்க்கும் வகையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக ஊதியம் பெறும் வேலைகள் மற்றும் மலிவு விலையில் ஆடம்பர வாழ்க்கை முறைகள் பெங்களூரு உலகளாவிய நகரமாக மாறும் சாத்தியம் உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோலாலம்பூர், லிஸ்பன், துபாய், மெக்சிகோ சிட்டி மற்றும் ரியோ டி ஜெனிரோ ஆகிய நகரங்களும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.