2022 - 2023 நிதியாண்டுக்கான புதுச்சேரி அரசின் பட்ஜெட்டை முதலமைச்சர் ரங்கசாமி வரும் 22ஆம் தேதி சட்டப் பேரவையில் தாக்கல் செய்ய உள்ளதாகப் பேரவைத் தலைவர் செல்வம் அறிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டம் கடந்த 10 ந் தேதி தொடங்கிய நிலையில் பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்காததால் கூட்டத்தொடர் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் 10 ஆயிரத்து 696 கோடி ரூபாய் மதிப்பிலான பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து ஆகஸ்ட் 22ஆம் நாள் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் எனச் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் அறிவித்துள்ளார்.