செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

இலங்கை துறைமுகத்திற்கு வந்தது சீன உளவுக் கப்பல் யுவான் வான்-5.. தமிழக கடலோரப் பகுதியில் உஷார் நடவடிக்கை..!

Aug 17, 2022 09:42:12 AM

சீன உளவுக் கப்பல் யுவான் வான்-5 இலங்கை துறைமுகத்திற்கு வந்து சேர்ந்ததை அடுத்து, தமிழக கடலோரப் பகுதியில் உஷார் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சீன ராணுவத்திடம் உள்ள 7 உளவுக் கப்பல்களில் ஒன்றான யுவான் வாங்-5 பல்வேறு நவீன வசதிகளைக் கொண்டதாகும். 750 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இடங்களைக் கண்காணிப்பதுடன், செயற்கைக்கோள்கள், ஏவுகணைகளையும் ஆய்வு செய்ய முடியும்.

இந்தக் கப்பல் இலங்கைக்கு வருவதற்கு இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்திருந்த நிலையில், இலங்கை அரசு அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வர பாதுகாப்பு அனுமதியை அளித்தது. இதையடுத்து நேற்று காலை யுவான் வாங்-5 கப்பல் அங்கு நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டது.

சீன உளவுக் கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஒருவாரம் நிற்கும் என்பதால், தென்இந்தியாவில் உள்ள ராணுவ நிலையங்கள், அணுமின்நிலையங்களைக் கண்காணிக்கும் அபாயம் உள்ளது.

இதனால் தமிழக கடலோரப் பகுதிகளில் உஷார் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், தனுஷ்கோடி உள்ளிட்ட கடல்பகுதி முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா கடற் பகுதியில் இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படைக்கு சொந்தமான 8 கப்பல்கள், 2 விமானங்கள், 3 ஹெலிகாப்டர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, அம்பந்தோட்டை துறைமுகத்தை ராணுவ நோக்கத்திற்காக சீனா பயன்படுத்த ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.

இலங்கை வந்துள்ள கப்பலுக்கு, ஆய்வுக் கப்பல் என்பதன் அடிப்படையில் தான் அனுமதி வழங்கப்பட்டதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.


Advertisement
தூத்துக்குடி அருகே வட்டார வளர்ச்சி அலுவலரின் கார் மோதி முதியவர் உயிரிழப்பு
தீபாவளியை முன்னிட்டு ஈரோட்டில் நடைபெற்ற வாரச்சந்தையில் ரூ 2 கோடி வரை வர்த்தகம்
புதுச்சேரியில் கடலில் குளிக்கச் சென்று மாயமான மாணவர்களை தேடும் பணி தீவிரம்
மாநாட்டுத் திடலுக்கு விஜய் வருகை
தீபாவளியை முன்னிட்டு திருச்சியில் இனிப்பு கடைகளில் காரம், இனிப்பு தயாரிப்பு பணி தீவிரம்
"கமலா ஹாரிஸ் வாழ்க்கையில் கஷ்டப்பட்டு முன்னேறியவர்" கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக பில் கிளின்டன் பிரச்சாரம்
நாமக்கல் கவிஞர் மாளிகையில் திடீரென விரிசல்
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மகன் வீட்டில் அமலாக்கத் துறையினர் 14 மணி நேரம் சோதனை
ரூ.27.9 கோடி லஞ்சம் பெற்ற புகாரில் முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை..
திருவள்ளூரில் 100 நாள் வேலைத்திட்ட பணிகளை இயந்திரம் மூலம் செய்வதாக எழுந்துள்ள புகார்

Advertisement
Posted Oct 30, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

த.வெ.க மாநாட்டிற்கு வந்து மாயமாகி தவித்த மாணவர் .. மீட்டு வீட்டுக்கு அனுப்பிய விவசாயி ..! ஆரத்தி எடுத்து தாய் ஆனந்த கண்ணீர்

Posted Oct 30, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

15 வயது சிறுமி கொலை..டிராவல் பேக்கில் சடலம் ராஜஸ்தான் தம்பதி கைது..! போலீசில் சிக்கியது எப்படி ?

Posted Oct 29, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

ஸ்லோ பாய்சன் வேஸ்ட் தலையனை தான் பெஸ்ட் காதலுக்கு பலியான கணவர்..! இன்ஸ்டா ரீல்ஸ் பிரபலம் சிக்கியது எப்படி ?

Posted Oct 28, 2024 in வீடியோ,Big Stories,

மதுரையில் வெள்ளம் திமுக அமைச்சருக்கு ராஜூபாய் டிப்ஸ்..! இப்படி செய்ங்க வெள்ளம் வடிஞ்சிரும்..!

Posted Oct 26, 2024 in வீடியோ,Big Stories,

விஜயின் வி-சாலை மாநாடு... விவேகமும், வியூகமும் வெற்றிக்கு வழிவகுக்குமா...


Advertisement