தேசிய கொடியுடன் 5 கோடி செல்பி புகைப்படங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாட்டின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் தங்களது வீடுகளில் தேசிய கொடியை ஏற்றுமாறு பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். அதனை ஏற்று நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி, கொண்டாடினர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை 4 மணி நிலவரப்படி சுமார் 5 கோடி 'செல்பி' புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டதாகவும், இது ஒரு பிராமண்ட சாதனை என்றும் மத்திய கலாசார அமைச்சகம் தெரிவித்துள்ளது.