கடன் வசூலிப்பது தொடர்பாக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
அதன்படி, கடன்மீட்பு நடவடிக்கையின்போது உடலளவிலோ மனத்தளவிலோ துன்புறுத்தக் கூடாது என்றும், பொதுவெளியில் அவமானப்படுத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது.
கடன் தவணையை செலுத்துமாறு காலை 8 மணிக்கு முன்பும், இரவு 7 மணிக்கு பிறகும் தொடர்பு கொள்ளக்கூடாது என்றும் அவர்களின் தனியுரிமையில் தலையிடக் கூடாது என்றும் ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.