குடியரசுத் துணைத் தலைவர் பதவி கிடைக்கும் என நிதிஷ்குமார் எதிர்பார்த்ததாகவும், பாஜக அதற்கு மறுத்துவிட்டதால்தான் ஆத்திரமும் ஏமாற்றமும் அடைந்து கூட்டணியில் இருந்து விலகிவிட்டதாகவும் பீகார் மாநில பாஜக தலைவர் சுஷில் மோடி தெரிவித்துள்ளார்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளில் ஆறுமுறை பிரதமர் மோடி நிதிஷ்குமாருடன் பேசியிருப்பதாகவும், இரண்டு நாட்களுக்கு முன்பு கூட அமித் ஷாவிடம் எந்த விதப் பிரச்சினையும் இல்லை என்று உறுதியளித்ததாகவும் சுஷில் மோடி கூறியுள்ளார்