இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு புதிதாகத் தேர்தல் நடத்த வலியுறுத்தி நூற்றுக்கணக்கானோர் பேரணி சென்றனர்.
கொழும்பில் உள்ள சுதந்திரச் சதுக்கத்தை நோக்கி நடைபெற்ற இந்த பேரணியில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள போராட்டக்காரர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் இலங்கை மக்கள் விரும்பும் புதிய அரசை தேர்வு செய்ய மீண்டும் பொதுத்தேர்தல் நடத்த வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.