சென்னையில் நீருக்கு அடியில் மெட்ரோ சுரங்கப்பாதை அமைக்க தமிழ்நாடு மாநில கடலோர மேலாண்மை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், 2ம் கட்டமாக ரூ.63,200 கோடி செலவில் 118.9 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் பாதை, ரயில் நிலையங்கள் அமைக்கும் பணி நடைபெறுகிறது.
அதில் மாதவரம் - சோளிங்கநல்லூர் வரை மெட்ரோ ரயில் பாதை அடையாறு ஆற்றின் கீழ் சுரங்கம் மூலமாக பயணிக்கும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பங்கிங்காம் கால்வாயிலும் மெட்ரோ ரயில் சுரங்கம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு அனுமதி கோரி மெட்ரோ ரயில் நிர்வாகம் விண்ணிப்பித்திருந்த நிலையில், மாநில கடலோர மேலாண்மை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
மத்திய கடலோர ஒங்குமுறை ஆணையத்திடம் அனுமதி பெற்ற பின் பணிகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.