சீனாவின் ரியல் எஸ்டேட் துறை சார்ந்த பெரும் நிறுவனங்கள் திவாலாகும் நிலையை நோக்கி செல்லும் நிலையில், எஃகு ஏற்றுமதியில் சீனாவிற்கு மாற்றாக இந்தியா வர வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
உலகளவில், மொத்த எஃகு உற்பத்தியில் 57 சதவீதம் சீனா வகிக்கும் நிலையில், அந்நாட்டில் 30 சதவீத எஃகு உற்பத்தி நிறுவனங்கள் ரியல் எஸ்டேட் துறையை நம்பி உள்ளன.
தற்போது சீன ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சனை தீவிரமாகி வரும் நிலையில், பல நிறுவனங்கள் திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
அதேநேரம் இந்திய ரியல் எஸ்டேட் துறை வலுவான வளர்ச்சியை கண்டு வருவதாலும், எஃகு உற்பத்தி கடந்த 2021-ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 18 புள்ளி 1 சதவீதம் அதிகரித்துள்ளதும், 30 சதவீத எஃகு உற்பத்தில் இந்தியாவை முன்னிருத்த வாய்ப்பை ஏற்படுத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.