தைவானைச் சுற்றிலும் உள்ள வான்பரப்பில் படிப்படியாக விமானப் போக்குவரத்து இயல்புநிலைக்குத் திரும்பியுள்ளதாகத் தைவான் அரசு தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவானுக்கு வந்து சென்றதையடுத்துத் தைவானைச் சுற்றியுள்ள கடற்பகுதியில் சீனப் போர்க் கப்பல்கள் ஒத்திகை நடத்தின. போர்விமானங்கள் பறந்ததுடன் ஏவுகணைகளும் ஏவப்பட்டன.
இதனால் தைவானுக்கான விமானச் சேவைகளைப் பல நிறுவனங்கள் ரத்து செய்தன. தைவான் வழியாகச் செல்ல வேண்டிய விமானங்கள் வேறுபாதைகளில் திருப்பி விடப்பட்டன.
போர் ஒத்திகை குறித்து விமானப் பைலட்களுக்குச் சீனா விடுத்திருந்த எச்சரிக்கை முடிவடைந்ததால் மீண்டும் விமானச் சேவைகள் இயல்புநிலைக்கு வந்துள்ளதாகத் தைவான் தெரிவித்துள்ளது. இதனிடையே தைவான் அருகே மீண்டும் போர் ஒத்திகையைத் தொடங்கியுள்ளதாகச் சீனா அறிவித்துள்ளது.