மாருதி சுசுகி நிறுவனம் நடப்பு நிதியாண்டில் 20 இலட்சம் வாகனங்களைத் தயாரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக அதன் தலைவர் பார்கவா தெரிவித்துள்ளார்.
கடந்த நிதியாண்டில் கொரோனா சூழல், சிப் பற்றாக்குறை இருந்தபோதிலும் 16 இலட்சத்து 52 ஆயிரம் வாகனங்களைத் தயாரித்துள்ளதாகத் தெரிவித்தார்.
குஜராத்தில் உள்ள தங்கள் தொழிற்சாலையில் அடுத்த மூன்றாண்டுகளில் மின்சார வாகனங்கள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வரும் என்றும் பார்கவா குறிப்பிட்டார்.