ஒடிசா மாநிலம் கோர்தா மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி மாநகரப் பேருந்து விபத்துக்குள்ளானது.
கடந்த சில நாட்களாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில், பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இந்நிலையில், 20-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து வெள்ளத்தில் மூழ்கிய ஜட்னி சுரங்கப்பாதையினை கடக்க முயன்ற போது சிக்கிக் கொண்டது.
நீரில் பேருந்து மூழ்கி நின்றதால், உள்ளே இருந்தவர்கள் கூச்சலிட, விரைந்துவந்த பொதுமக்கள் அவர்களை பத்திரமாக மீட்டனர்.