கொல்கத்தாவின் அருங்காட்சியக காவலர்களிடையே ஏற்பட்ட மோதல் துப்பாக்கிச் சண்டையாக வெடித்தது. இதில் ஒரு மத்திய தொழில் பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளர் சுட்டுக் கொல்லப்ப்டடார்.
மேலும் சிலர் காயம் அடைந்தனர்.ஏ.கே 47 மூலம் துப்பாக்கிச் சூடு நடத்திய தலைமைக் கான்ஸ்டபிள் போலீசாரால் கைது செய்யப்பட்டார். மாலை 6,30 மணிக்கு அருங்காட்சியகம் மூடப்பட்டது.
அப்போது பாதுகாவலர்களுக்கு இடையே மோதல் வெடித்தது. துப்பாக்கியால் 50 ரவுண்டுகள் சுடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து குண்டு துளைக்காத கவச ஆடை அணிந்த காவல் படையுடன் கொல்கத்தா ஆணையர் வினித் கோயல் தலைமையிலான படையினர் ஒன்றரை மணி நேர கடும் முயற்சிக்குப் பின்னர் துப்பாக்கியால் சுட்டவரை சுற்றி வளைத்து மடக்கி கைது செய்தனர்.