பணிபுரியுங்கள் அல்லது விருப்ப ஓய்வு பெற்றுச் செல்லுங்கள் என்று பி.எஸ்.என்.எல் ஊழியர்களுக்கு மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு பி.எஸ்.என்.எல்-லை மீட்பதற்காக ஒரு லட்சத்து 64 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை ஒதுக்குவதாக மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில், பி.எஸ்.என்.எல்.லில் பணியாற்றும் 62 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் அல்லது விருப்ப ஓய்வுபெற்று விலகிப் போய் விட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.