கேரளாவில் கூகுள் மேப்பின் உதவியோடு சென்ற கார் ஓடைக்குள் சிக்கிக் கொண்ட நிலையில், பொதுமக்கள் உதவியுடன் கயிறு கட்டி மீட்கப்பட்டது. திருவள்ள கும்பநாடு பகுதியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர், தனது குடும்பத்துடன் எர்ணாகுளத்தில் இருந்து திருவள்ள நோக்கி காரில் பயணம் செய்து கொண்டிருந்தார்.
சீக்கிரமாக சென்று விடலாம் என எண்ணி கூகுள் மேப் காட்டிய சாலை வழியாக சென்ற நிலையில், இரவு 11 மணியளவில் திருவாத்துக்கல் அருகே திடீரென சாலை முடிந்து, கார் நேராக ஓடையில் சிக்கி கொண்டது.
கார் பயணித்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியினர் காரில் இருந்த 4 மாத குழந்தை உட்பட 4 பேரையும் பத்திரமாக மீட்டனர். உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.