அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசியின் தைவான் பயணத்தை அடுத்து, சீனாவுடன் பதற்றம் நிலவிவரும் நிலையில், ஏவுகணை சோதனையை அமெரிக்கா தள்ளிவைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வியாழக்கிழமையன்று மினிட்மேன்-3 (Minuteman III) என்ற கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையின் சோதனை நடைபெறவிருந்த நிலையில், அதனை தள்ளிவைக்க பாதுக்காப்புத்துறைக்கு அமைச்சர் லாயிட் ஆஸ்டின் அறிவுறுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தைவானைச் சுற்றி சீனாவின் ராணுவ நடவடிக்கை அதிகரித்ததால் இம்முடிவு எடுக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.