ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அல் கொய்தா தலைவர் அய்மன் அல் - ஜவாஹிரி பதுங்கி இருந்தது தங்களுக்குத் தெரியாது என தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 31ஆம் தேதியன்று, காபூலின் மையப்பகுதியில் பதுங்கியிருந்த அய்மன் அல் - ஜவாஹிரி, அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தின் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
இந்நிலையில், அவர் எப்போது காபூல் வந்தார் என்பது பற்றி தெரியாது என்றும், அது குறித்து தீவிர விசாரணை நடத்த புலனாய்வு அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், ஆப்கானிஸ்தானை ஆளும் தலிபான்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.