பாகிஸ்தானில் 1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஹிந்து கோயில் மீண்டும் வழிபாட்டிற்காக திறக்கப்பட்டது.
பாகிஸ்தானின் லாகூர் நகரத்தில் உள்ள அனார்கலி பாஜாரில் 1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்த வால்மீகி கோயில் உள்ளது. இக்கோவிலை கிரிஸ்துவ குடும்பம் ஒன்று தங்களுக்கு சொந்தமான இடத்தில் அமைந்துள்ளது என கூறி ஆக்கிரமித்து வைத்திருந்தது.
இதனை அறிந்த பாகிஸ்தான் சிறுபான்மை வழிபாட்டு மேற்பார்வை அமைப்பு ஒன்று சட்டரீதியாக வழக்கு நடத்தி 20 ஆண்டுகளுக்கு பின் இக்கோயிலை மீட்டது. இதனைத் தொடர்ந்து, நேற்று திறக்கப்பட்ட அக்கோயில் உள்ளூரில் வசிக்கும் 100க்கும் மேற்பட்ட ஹிந்து, முஸ்லீம், கிரிஸ்துவ மற்றும் சீக்கிய மதத் தலைவர்கள் சென்று வழிபட்டு, பிரசாதம் பெற்றுக்கொண்டனர்.