பாரத் பில் பரிவர்த்தனையை பயன்படுத்தி வெளிநாடுகளில் வேலை செய்யும் இந்தியர்கள், தாய்நாட்டில் வசிக்கும் தங்கள் குடும்பத்தினரின்
கல்வி கட்டணம், மின் கட்டணம் உள்ளிட்ட அனைத்து கட்டணங்களையும் ஒரே தளத்தின் வாயிலாக செலுத்த முடியும் என்றும் இத்திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது பாரத் பில் பரிவர்த்தனையில் 20,000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இணைந்துள்ள நிலையில், மாதந்தோறும் எட்டு கோடிக்கும் அதிகமான பரிவர்த்தனைகள் நடைபெற்று வருவதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.