ஆதர்ஷ் நிலையத் திட்டத்தில் நடப்பு நிதியாண்டில் 1,253 ரயில் நிலையங்கள் புதுப்பிக்கப்பட உள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் உறுப்பினரின் வினாவுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில், மாதிரி, நவீன, ஆதர்ச நிலையத் திட்டங்களின்படி ரயில் நிலையங்களைப் புதுப்பித்து, மேம்படுத்தி, அழகுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.