நேஷனல் ஹெரால்டு வழக்கில் ஹவாலா பணப் பரிவர்த்தனை நடந்திருப்பதற்கான ஆதாரங்களை அமலாக்கத்துறை கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கடந்த சில தினங்களுக்கு முன் டெல்லியில் நடத்திய சோதனையின் போது, கொல்கத்தா மற்றும் மும்பையில் இருந்து ஹவாலா ஆபரேட்டர்கள் மூலம் பரிவர்த்தனை நடந்துள்ள ஆதாரங்கள் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது.
எற்கனவே நடத்திய விசாரணையின் போது காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மற்றும் ராகுல்காந்தி அளித்த வாக்குமூலங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் மறு ஆய்வு செய்து வருகின்றனர்.