கார்களில் உள்ள ஏர்பேக்குகளின் எண்ணிக்கையை உயர்த்த, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
மக்களவையில் பேசிய அவர், கார்களில் முன்பக்க இருக்கைகளுக்கு ஏர்பேக்குகள் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், பின்புற இருக்கைகளில் பயணிப்பவர்களின் பாதுகாப்பு கருதி, அங்கும் ஏர் பேக்குகள் பொருத்துவது குறித்து அரசு திட்டமிட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
கூடுதல் ஏர் பேக்குகள் குறித்த பரிந்துரைகள் பரிசீலனையில் உள்ளதாகவும், விரைவில் அது தொடர்பாக மத்திய அரசு முடிவெடுக்கும் என்றும் கட்காரி கூறினார்.