பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சி தடைசெய்யப்பட்ட வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து பல லட்சம் டாலர் நிதி பெற்றுள்ளதை அந்நாட்டு தேர்தல் ஆணையம் உறுதிசெய்தது.
இம்ரான் கானின் பி.டி.ஐ கட்சி நிறுவனர்களுள் ஒருவர் அதே கட்சியின் மீது 2014 ஆம் ஆண்டு தொடுத்த ஊழல் புகாரை அந்நாட்டு தேர்தல் ஆணையம் 8 ஆண்டுகளுக்குப் பின் விசாரித்து தீர்ப்பளித்துள்ளது.
நிதி நிறுவன மோசடி வழக்கில் தொடர்புடைய துபாயைச் சேர்ந்த தொழில் அதிபர் ஆரிப் நக்வி உள்பட ஏராளமான தடைசெய்யப்பட்ட வெளிநாட்டு நபர்கள், நிறுவனங்களிடம் இருந்து நிதி திரட்டியதை உறுதி செய்த தேர்தல் ஆணையம் அந்த பணத்தை ஏன் பறிமுதல் செய்யக்கூடாது என கேள்வி எழுப்பியுள்ளது.
சட்டவிரோதமாக பணம் பெற்றதால் இம்ரான் கான் அரசியலில் ஈடுபட தடை விதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.