தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் அருகே நள்ளிரவில் கொள்ளையன் ஒருவன் டிராக்டரைக் கொண்டு ஏ.டி.எம் இயந்திரத்தை உடைக்க முயன்ற காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
வர்ணி நகரில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஏ.டி.எம் மையத்திற்கு டிராக்டரில் வந்த கொள்ளையன், ஏ.டி.எம் மையத்தின் கதவுகளை டிராக்டரைக் கொண்டு இடித்து நொறுக்கியதோடு, ஏடிஎம் இயந்திரத்தையும் இடித்து உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றுள்ளான்.
ஆனால், அதற்குள்ளாக ஏடிஎம் இயந்திரத்தில் பொருத்தப்பட்டிருந்த எச்சரிக்கை அலாரம் ஒலிக்கவே, டிராக்டரை அங்கேயே விட்டு விட்டு கொள்ளையன் ஓட்டம் பிடித்துள்ளான். அந்த டிராக்டரை கைப்பற்றிய போலீசார், வங்கி மேலாளர் அளித்த புகாரின் பேரில் கொள்ளையனை தேடி வருகின்றனர்.