நான்கு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகமது சோலி புதுடெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.
புதுடெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. இருவரும் இருதரப்பு நல்லுறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது.