அணு ஆயுதப் போரில் வெற்றியாளர்கள் இருக்க முடியாது என்று எச்சரித்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், அத்தகைய மோதலை ஒருபோதும் தொடங்கக்கூடாது என்று கூறியுள்ளார்.
அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தம் குறித்த மாநாட்டில் பங்கேற்பவர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், அணு ஆயுதம் குறித்த ஒப்பந்தத்திற்கு ரஷ்யா முழுமையாக இணங்குவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், உலக நாடுகளுக்கு சமமான பாதுகாப்பு அளிப்பதில் ரஷ்யா துணை நிற்கும் என்றும் அதிபர் புதின் குறிப்பிட்டுள்ளார்.