சென்னை வில்லிவாக்கத்தில் டிபிஎஸ் வங்கியின் சுவற்றை துளையிட்டு 20 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
லட்சுமி விலாஸ் வங்கி, சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் டிபிஎஸ் வங்கியுடன் இணைக்கப்பட்டது. வங்கியின் லாக்கர்கள்,பெட்டகங்கள் கட்டிடத்தின் தரைதளத்திற்கு கீழே உள்ள தளத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தரைதளத்தில் உள்ள ஒரு ஜன்னல் உடைக்கப்பட்டிருப்பதை கண்ட வங்கி ஊழியர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் வந்து விசாரணை நடத்தியதில் ஒரு லாக்கரில் இருந்து இருபதாயிரம் ரூபாயை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.
அருகிலிருந்த பெரிய லாக்கரில் வங்கியின் 7 கோடி ரூபாய் பணம் இருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக 3 பேரை பிடித்துவைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.