சென்னை பெரம்பூரில் குளிர்சாதன பெட்டி வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பால் வியாபாரி உயிரிழந்தார்.
திருவிக மணவாளன் பகுதியைச் சேர்ந்த ஷியாம் என்பவர் அப்பகுதியில் பால் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். கடந்த 6 மாதத்திற்கு முன் திருமணம் நடைபெற்ற நிலையில், ஆடி மாதம் என்பதால் கணவன்-மனைவி இருவரும் பிரிந்து அப்பெண் தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில், வீட்டின் கீழ் தளத்தில் உள்ள படுக்கை அறையில் ஷியாம் தனியாக தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென பயங்கர வெடி சத்தம் கேட்டு கடும் புகை சூழ்ந்தது. ஏசி வெடித்து சிதறியதில் உடல் கருகி ஷியாம் உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த போலீசார், சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.