மேற்கு வங்காளத்தில் Cooch Behar பகுதியில் வேன் மீது மின்சாரம் பாய்ந்ததில் 10 பேர் உயிரிழந்தனர்.
Jalpesh நோக்கி சென்ற அந்த வேனில் 27க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். Dharla பாலம் அருகே சென்ற போது அந்த வேனில் திடீரென்று மின்சாரம் பாய்ந்ததில் 10பேர் உயிரிழந்தனர்.
மேலும் 16 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முதல்கட்ட விசாரணையில் வேனில் பின்புறம் இருந்த ஜெனரேட்டர் வயரில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்பது தெரிய வந்துள்ளது.