இந்திய எல்லையில் தனது ஆதிக்கத்தை அதிகரிக்கும் வகையில், திபெத்தியர்களை வலுக்கட்டாயமாக குடியேற்றுவதற்கு சீனா திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இமயமலை பகுதியில் 624 குடியிருப்புகளை கட்ட சீனா திட்டமிட்டுள்ள நிலையில், 2030 ஆண்டுக்குள் திபெத் தன்னாட்சி பகுதியிலிருந்து ஒரு லட்சத்துக்கும் அதிகமான திபெத்தியர்களை வெளியேற்ற முடிவு செய்துள்ளது.
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் கடல் மட்டத்திலிருந்து 4,800 மீட்டர் உயரத்தில் வசிப்பவர்களை இடமாற்றம் செய்வதாக சீனா கூறினாலும் அதற்கு அறிவியல் ரீதியாத எவ்வித ஆதாரமும் இல்லை என கூறப்படுகிறது.