ஒவ்வொரு வீட்டிலும் ஒரு சிறிய நூலகம் இருக்க வேண்டும் எனக் கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.
கோவாவில் புத்தகம் படிக்கும் இயக்கத்தைத் தொடக்கி வைத்த அவர், வீட்டில் பலவகை மதுபானங்கள் கொண்ட குடிப்பகம் இருப்பதாகப் பெருமையுடன் கூறிக்கொள்ளும் சிலர், வீட்டில் ஒரு நூலகம் வைத்துக்கொள்வதில்லை எனத் தெரிவித்தார்.
தனது வீட்டில் சிறிய நூலகம் இருப்பதாகவும், அதிலுள்ள புத்தகங்களை ஆசிரியரான தன் மனைவி அதிகம் படித்து வருவதாகவும் குறிப்பிட்டார். வீட்டில் குடிப்பகம் வைப்பதைவிட நூலகம் வைத்தால் அது குழந்தைகளிடம் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார்.