ரஷ்யாவின் எரிசக்தி நிறுவனமான காஸ்ப்ரோம், குழாய் வழியாக ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் எரிவாயு அளவில் 20 சதவீதத்தை குறைத்துள்ளது.
ரஷ்யாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு பெரிய குழாய் வழியாக இயற்கை எரிவாயு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
உக்ரைன்-ரஷ்யாவுக்கு இடையேயான போரால் ரஷ்யா மீது ஐரோப்பிய நாடுகள் பல்வேறு பொருளாதார தடைகள் விதித்ததால், அதற்கு பதிலடியாக எரிவாயு விலையை உயர்த்துவதற்கான அரசியல் நடவடிக்கை என ஜெர்மனி குற்றம் சாட்டியுள்ளது.
தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக எரிவாயு அளவு குறைக்கப்பட்டதாக ரஷ்யா விளக்கம் அளித்துள்ளது.