பயணிகளின் பாதுகாப்பு கருதி 8 வாரங்களுக்கு விமானப் போக்குவரத்தை பாதியாகக் குறைக்கும்படி ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு விமான போக்குவரத்து இயக்குனர் ஜெனரல் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.
இந்த எட்டு வாரங்களுக்கு ஸ்பைஸ் ஜெட்டின் செயல்பாட்டுகள் கண்காணிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலங்களில் ஸ்பைஸ் ஜெட் விமானங்கள் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
இந்த உத்தரவால் விமானங்கள் சேவை பாதிக்கப்படாது என்றும் விமானங்கள் ரத்து ஆகாது என்றும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.