அமெரிக்கா பொருளாதார தேக்கநிலையிலோ அதற்கு முந்தைய நிலையிலோ இல்லை என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
செய்தியாளர்களை சந்தித்த வெள்ளை மாளிகை ஊடகத் தொடர்பாளர் கரீன் ஜீன் பியரி, முக்கால் சதவீதம் வட்டியை உயர்த்திய பெடரல் வங்கியின் நிதிக் கொள்கையின் முடிவை குறித்து கருத்து கூற மறுத்துவிட்டார்.
பெடரல் ரிசர்வ் வங்கியை சுதந்திரமாக இருக்க ஜோ பைடன் நிர்வாகம் தொடர்ந்து அனுமதிக்கும் என்று அவர் கூறினார்.